யாழ்.கொக்குவில் பகுதியில் வாள் வெட்டுக் கும்பலை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
கொக்குவில் காந்திஜீ சனசமூக நிலைய பகுதியில் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொள்ளும் நோக்குடன் வந்த கும்பலை அந்தப் பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து இன்று மதியம் மடக்கி பிடித்தனர்.
சுமார் 30 மோட்டார் சைக்கிள்களில் 90 பேர் கொண்ட கும்பல், வாள்களுடன் வருகை தந்தது.
அதன் போது அங்கு கூடிய அந்தப் பகுதி பொதுமக்கள் தாக்குதல் மேற்கொள்ள வந்த கும்பலை மடக்கி பிடிக்க முற்பட்டுள்ளனர். அப்போது கும்பல் தப்பி செல்ல முயன்றது. தமது 7 மோட்டார் சைக்கிள்களை கைவிட்டு சிலர் தப்பி ஓடியுள்ளனர். தப்பியோடியவர்களில் நால்வரை ஊரவர்கள் ஒன்றிணைந்து மடக்கி பிடித்துள்ளனர்.
தம்மால் பிடிக்கப்பட்ட வாள் வெட்டுக் கும்பலைச் சேர்ந்த நால்வரையும் , மீட்கப்பட்ட 07 மோட்டார் சைக்கிள்களையும் யாழ்ப்பாண பொலிசாரிடம் அந்தப்பகுதி மக்கள் ஒப்படைத்தனர்.
நால்வரையும் கைது செய்ய பொலிஸார் ,பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். மீட்கப்பட்ட 7 மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்டன.