க.பொ. த. உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு கல்வி வலயத்திலும் பாடசாலைகள் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளன.
தென்மராட்சி கல்வி வலயத்துக்குட்பட்ட சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் சிங்கராசா நிலக்சன் கலைப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவி எஸ். சாம்பவி வர்த்தக பிரிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
வலிகாமம் கல்வி வலயத்தில் கந்தரோடை ஸ்கந்தவரோதய கல்லூரி மாணவி ரவிச்சந்திரன் கலெக்சியா உயிரியல் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.
வடமராட்சி கல்வி வலயத்துக்குட்பட்ட பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சண்முகராசா சஞ்சித் பெளதீக விஞ்ஞான பாட பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
இம்முறை யாழ்.மாவட்டத்தில் இருந்து எந்தவொரு மாணவர்களும் தேசிய ரீதியில் முதல் மூன்று இடங்களையும் பெறவில்லை என்பது சிந்திக்கவைக்கின்றது.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடம்பெறுவதால் அதற்கு அதிபர்கள் ஆசிரியர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளதால் பாடசாலைகளுக்கு கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.