பீப்பாய் வடிவிலான செம்மஞ்சள் நிற அடைப்பு ஒன்றை பயன்படுத்தி அட்லாண்டிக் பெருங்கடலை தனியே கடப்பதற்கு பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் பயணத்தை ஆரம்பித்துள்ளார். ஸ்பெயினின் கனரி தீவில் இருந்து கடந்த புதன்கிழமை பயணத்தை ஆரம்பித்த 71 வயதான ஜீன் ஜக்ஸ் மூன்று மாதத்திற்குள் கரீபியன் தீவுகளை அடைய எதிர்பார்த்துள்ளார்.
அவரது பீப்பாயில் உறங்கும் அறை, சமையலறை மற்றும் சேமிப்புக் கிடங்கு அகியன உள்ளடங்குகின்றன. அட்லாண்டிக் நீரோட்டம் பற்றி ஆய்வு செய்யும் கடலியலாளர்களுக்கு உதவியாக அவர் தனது பயணம் நெடுகிலும் அடையாளத்தை கடலில் போடுவதற்கு திட்டமிட்டுள்ளார்.