மெக்ஸிகோவின் பியூப்லா (Puebla) மாநிலத்தில் இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில், இந்த மாத ஆரம்பத்தில் பதவியேற்ற ஆளுநரும் செனட்டரான அவரது கணவரும் உயிரிழந்துள்ளனர்.
பியூப்லா மாநிலத்தின் ஆளுநர் மார்தா எரிகா எலோன்ஸோ (Martha Erika Alonso) மற்றும் செனட்டர் ரபீல் மொரீனோ வெலீ (Rafael Moreno Valle) ஆகிய இருவரும் தமது பயணத்தை ஆரம்பித்த சிறிது நேரத்தில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
45 வயதான மார்தா எரிகா எலோன்ஸோ, கடந்த 14ஆம் திகதி பியூப்லா மாநிலத்தின் முதலாவது பெண் ஆளுநராகப் பதவியேற்றுள்ளார்.
அதேநேரம், 50 வயதான ரபீல் மொரீனோ வெலீ, 2011 ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு வரை, பியூப்லா மாநிலத்தின் ஆளுநராகப் பதவி வகித்துள்ளார்.