கிளிநொச்சி இரத்தினபுரத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட 31 ஆவது அணியினால் போர்வை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கிராமசேவையாளர் மற்றும் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர்களை தொடர்பு கொண்டு மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று இவ் உதவிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாளைய தினம் முல்லைத்தீவின் சில பகுதிகளில் பல்கலைக்கழக கலைப்பீட 31 ஆவது அணியினரால் உதவிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.