வடமராட்சி கிழக்கில் கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கில் தாளையடியைச் சேர்ந்த அருளானந்தம் யோண்சன் அருள்தாஸ் (ராஜன்) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார் .
இதேவேளை, கிளிநொச்சி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக மின்சாரம் தாக்கி இரவு ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரியகுளம், கண்டாவளை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நல்லதம்பி திருச்செல்வம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த தொடர்மழை வெள்ளம் காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் கிராமத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த ஒருவர் மின்கசிவில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.