பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான நொய்யி சூர்மான் பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 20 வது ஆண்டு நிறைவுவிழா இன்று (22.12.2018) மதியம் 12.00 மணிமுதல் இரவு 21.00 மணிவரை நொய்யி சூர்மானில் இடம் பெற்றது.ஆரம்ப நிகழ்வாக சுடர் ஏற்றல் நிகழ்வு இடம் பெற்றது .
பூநகரி தவளைப்பாய்சல் நடவடிக்கையில் 1993 இல் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் திலக்கன் அவர்கள் சகோதரி சுடர் ஏற்றலை ஆரம்பித்து வைக்க தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா, தமிழ்ச்சோலை தலைமைப் பணியகத்தைச் சேர்ந்த திரு அகிலன் மற்றும் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சுடர் ஏற்றி வைத்தனர்.அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழ்ச்சோலை கீதம் மாணவர்களால் இசைக்கப்பட்டது. வரவேற்பு உரையைத் தொடர்ந்து வரவேற்பு நடனம், மாணவர்களின் பேச்சு, அபிநய நடனம், நாடகம், வேடுவ நடனம், பாடல், எழுச்சி நடனம், கவியரங்கம், பட்டி மன்றம் என்பனவும், ஆசிரியர்கள் மதிப்பளித்தல், மணவர் மதிப்பளித்தல், மற்றும் தமிழ் மொழித் தேர்வில் சித்தியடைந்த மாணவர்களுக்கன சான்றிதழ் வழங்கல் என்பன இடம் பெற்றன.தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா, தமிழ்ச்சோலை தலைமைப் பணிமனையைச் சேர்ந்த திரு. அகிலன், தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. தங்கத்துரை மற்றும் நகரசபை துணைமுதல்வர் Marcelle FADHUILE ஆகியோர் உரையாற்றினர்.இறுதியாக மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் கொட்டொலியுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு -ஊடகப்பிரிவு)