வடக்கில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள இடரால் 13 ஆயிரத்து 646 குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்து 959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சி
கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 21 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 589 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 419 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 523 பேர் 10 இடைத்தங்கல் முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் வெள்ளத்தால் 4 வீடுகள் முழுமையாகவும் 4 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன
கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 7 ஆயிரத்து 386 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 821 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 556 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் 11 தற்காலிக முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் வெள்ளத்தால் 36 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பச்சிளைப்பளை பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 68 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 154 குடும்பங்களைச் சேர்ந்த 570 பேர் 5 தற்காலிக முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார்
“2 ஆயிரத்து 661 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 539 பேர் இடர்பெயர்ந்து 52 இடைத்தங்கல் முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றும் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது
இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணிவரையான நிலவரப்படி வடக்கில் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டோரின் விவரத்தை இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 739 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 397 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 620 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 989 பேர் இடர்பெயர்ந்து 16 இடைத்தங்கல் முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 891 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 532 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 546 பேர் இடம்பெயர்ந்து 7 தற்காலிக முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 310 குடும்பங்களைச் சேர்ந்த 928 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 155 பேர் ஒரு இடைத்தங்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 822 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 115 பேர் ஒரு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ளனர். பிரதேசத்தில் 2 வீடுகள் முழுமையாகவும் 3 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் நகர் பிரதேச செயலர் பிரிவில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ளனர்.
நானாட்டன் பிரதேச செயலர் பிரிவில் காற்றின் தாக்கத்தால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்
மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 273 குடும்பங்களைச் சேர்ந்த 708 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா
வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவில் 77 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.