அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும்: மைத்திரிபால சிறிசேன!

0
113

maithripala-srisena-6600இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் இந்திய மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என வடமாகாண மீனவர் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிமொழி வழங்கியுள்ளார்.

இலங்கை கடற்பரப்புக்குள் வந்து இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப் பதாகக் கூறப்படுவது வெறும் வதந்தியே என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வடமாகாண மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கூட்டமொன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். வடமாகாண அரசியல் பிரதிநிதிகள் மற்றும் மீனவசங்கப் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here