குறித்த விபத்தில் பலத்த காயத்திற்குள்ளான 8 வயது றுஸ்மிதன் எனும் சிறுவனே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று – பொத்துவில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த எட்டு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
நேற்று (17) காலை, திருக்கோவில் ஏ.பி.சி அருகில் பாதசாரிக் கடவையில் சென்ற குறித்த சிறுவன் மீது, சோடா ஏற்றி வந்த சிறிய ரக கென்ரர் வாகனம் ஒன்று மோதியுள்ளது. இதில் காயமுற்ற குறித்த சிறுவன், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் ஸ்கேன் அறிக்கையொன்றை பெறுவதற்காக அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பின்னர் மீண்டும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.