எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை ஏற்றுக்கொள்வதாக,சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு இன்று கூடிய போதே இந்த அறிவிப்பை சபாநாயகர் அறிவித்தார்.
இதனால் இதுவரை காலமும் எதிர்க்கட்சித் தலைவராக கடமையாற்றிவந்த இரா.சம்பந்தன் பதவியை இழந்துள்ளார்.