முல்லைத்தீவு பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரிப்பு!

0
302

முல்லைத்தீவு துணுக்காய்  தேறாங்கண்டல் பகுதியில்  காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துக்காணப்படுவதாகவும் இதனால் பெருமளவான பயிரழிவுகள் ஏற்படுவதாகவும் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது மாலை 6.00 மணிக்குபின்னர்  ஊர் மனைகளுக்குள்ளும்,பயிர்ச் செய்கை நிலங்களுக்குள்ளும் புகும் காட்டுயானைகள் நெற் பயிர்களையும் ஏனைய மரவள்ளி பூசனி போன்ற தோட்டப்பயிர்களையும் அழித்து வருகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் தேறாங்கண்டல்  பகுதியில் மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் பயிர் செய்கை நிலங்கள் ஆகியவற்றுக்குள் தொடர்ச்சியாக காட்டுயானைகள் உட்புகுந்து பெரும் அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன.

நேற்றைய தினம் இரவு  ஊர்மனைக்குள் புகுந்த காட்டுயானைகள் பெரும் பயிரழிவுகளை  ஏற்படுத்தியுள்ளன.

 கடந்த காலங்களில் இவ்வாறான யானைகளின் தாக்கங்கள் கடந்த காலங்களில் இல்லை என்றும் அண்மைய நாட்களாகவே இவ்வாறு யானைகளின் பாதிப்பு அதிகரித்துள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.Tweet

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here