மட்டக்களப்பில் கோரவிபத்தில் முறிவு வைத்தியர் பலி!

0
218

கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் பெரியநீலாவணை வைத்திய சாலைக்கு முன்பாக நேற்று  (17) மதியம் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி உமி ஏற்றிச் சென்ற கனரக லொறியும் நீலாவணையிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற பெரியநீலாவணை முறிவு வைத்தியர் செல்லத்தம்பி நவசிவாயம் (வயது-68) ஸ்தலத்திலேயே உயிரிழந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த வைத்தியரின் பேரப்பிள்ளைகள் இரண்டுபேர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதாரவைத்தியசாலை மற்றும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கனரக லொறி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுபுறத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டதாலயே இந்த கோர விபத்து இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரனைகளை கல்முனைபொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

‘.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here