2009-ம் ஆண்டு தமிழருக்கு ஏற்பட்ட கொடுமைகளைக் கண்டு தாயகத்திற்காகக் குரல் கொடுத்த தமிழ் மக்களின் மத்தியில், நானும் ஓருத்தி உங்களுடன் இருக்கின்றேன் என்று வேற்றினப் பெண்ணாக இருந்தாலும் எம் தாய் மண்ணிற்காகக் குரல் கொடுத்த வெள்ளையினத் தாயே!
இன்று எம்மைத் தவிக்க விட்டு தனியிடம் நாடிச் சென்றதென்ன?
துன்பக்கடலில் தத்தளிக்கவிட்டுத் தூரயிடம் போனதென்ன?
எம் தலைவரின் படத்தினைக் கிரீடமாகவும் எமது தாயகத்தின் கொடியினை கம்பீரமாகவும் தாங்கிப்பிடித்த வீரமங்கையே!
நாம் மறந்தாலும் எமது போராட்டத்தில் என்றென்றும் மறக்காமல் கலந்துகொள்ளும் விடியலின் தேவதையே உம்பெயரினை எமது நெஞ்சத்தில் நீங்காத பொன் எழுத்துக்களால் அச்சடித்துள்ளோம்.
போய் வாருங்கள் அம்மா……….!
மாவீரர் பணிமனை, தமிழர் ஒருங்கிணைப்பு குழு
பிரான்சு.