இரத்தினபுரி புதிய நகரில் தனியார் பேருந்து ஒன்றும் சிறிலங்கா இராணுவ காவு (ட்ரக்) வண்டியும் நேருக்குநேர் மோதியதில் இராணுவத்தினன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேற்படி விபத்துச் சம்பவம் புதன்கிழமை மாலை இடம்பெற்றது
சம்பவத்தில் இராணுவத்தினர் , பஸ் சாரதி உட்பட 28 போ் படுகாயங்களுக்குள்ளாகி இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த இராணுவத்தினர் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.