சென்னை அருகே மையம் கொண்ட புயல் டிச.17 இல் கரையை கடக்கும்!

0
419

 சென்னை அருகே மையம் கொண்டுள்ள புயல் டிச.17 பிற்கபலில் ஆந்திராவில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் பேசுகையில்:

தென் மேற்கு வங்க கடலில் மையம் கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று சென்னைக்கு தென்கிழக்கே 690 கி. மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது வலுப்பெற்று புயலாக மாறும். இந்த புயல் ஆந்திர மாநிலம், ஓங்கோல் காக்கி நாடா இடையே டிசம்பர் 17 ல் பிற்பகலில் கரையை கடக்கும்.
இதன் காரணமாக வரும் 15, 16 திகதிகளில் வட தமிழக கடலோரா பகுதிகுகளில் மிதமான மற்றும் கன மழை பெய்யக்கூடும். மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். சென்னையை பொறுத்தவரை இன்று லேசான மழையும், நாளை மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் தரைக்காற்று வீசும் . வரும் . 14,15, 17 திகதிகளில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here