கண்டியில் கண்­ணாடிப் பாளங்கள் சரிந்து விழுந்­ததில் இளைஞர் பரி­தாப மர­ண­ம்­!

0
128

kannadiகண்­ணாடிப் பாளங்கள் சரிந்து விழுந்­ததில் கழுத்து வெட்­டப்­பட்டு 28 வயது நிரம்­பிய இளைஞர் ஒருவர் பரி­தா­ப­மாக மர­ண­ம­டைந்­துள்ளார்.

கண்டி, மஹிய்­யாவைப் பகு­தியில் கண்­ணாடிப் பாளங்கள் (சீட் கிளாஸ்) விற்­பனை செய்யும் நிறு­வன களஞ்­சிய அறையில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. சுமார் 120 கிலோ எடை­கொண்ட சீட் கண்­ணாடிப் பாளங்­களே இவ்­வாறு மேற்­படி இளை­ஞர்­மீது விழுந்­துள்­ளன. இவர் கண்­ணாடிப் பாளங்­களை கையாள்­கையில் இவ்­வி­பத்து ஏற்­பட்­டி­ருக்­கலாம் எனச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது. சம்­பவம் நடக்கும் போது நேரில் யாரும் காண­வில்லை எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பின்னர் ஸ்தலத்­திற்கு கண்டி மாந­கர சபையின் தீய­ணைக்கும் பிரி­வினர் உட­ன­டி­யாக அழைக்­கப்­பட்டு காய­ம­டைந்­த­வரை வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்­துச்­செ­ல்ல எடுக்­கப்­பட்ட முயற்சி தோல்­வியில் முடிந்­துள்­ளது.

அதே­நேரம் கண்­ணாடி களஞ்­சிய உரி­மை­யாளர் ஸ்தலத்­திற்கு வந்­த­போது சம்­ப­வத்தை நேரில் கண்­ட­தினால் ஏற்­பட்ட அதிர்ச்­சியில் இரு­தயப் பாதிப்­பிற்­குள்­ளாகி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கண்டி பொலி ஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here