துருக்கி தலைநகர் அங்காராவில் இருந்து மத்திய துருக்கியின் கொன்யா நோக்கி இன்று காலை அதிவேக ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. மர்சாண்டிஸ் ரெயில் நிலையத்தை கடந்து சென்றபோதுஇ திடீரென நடைமேம்பாலத்தின் மீது மோதியது. இதனால் இரும்பினால் அமைக்கப்பட்ட அந்த மேம்பாலம் உடைந்தது. அதில் ரெயில் பெட்டிகள் சிக்கி உருக்குலைந்தன. அத்துடன் 2 பெட்டிகள் தடம்புரண்டன.
விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ரெயில் பெட்டிகளில் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடியவர்கள் வெளியேற்றப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் 4 பேர் பலியாகியிருப்பதாகவும், 43 பேர் படுகாயம் அடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ரெயில் நிலையத்தை கடந்தபோது உள்ளூர் ரெயில் மீது அதிவேக ரெயில் மோதியதையடுத்து, தடம்புரண்டு பாலத்தின் மீது மோதியதாக தெரியவந்துள்ளது.