மன்னாரில் தோண்டப்படும் மனிதப் புதைகுழியிலிருந்து 21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட 276 ற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த இடம் யுத்தத்தின்போது இருதசாப்தங்களுக்கு மேலாக சிறீலங்கா இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டில் இருந்தது.
இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டும். கடத்தப்பட்ட பின்னரும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் பெண்கள் போன்றோர் கொடூரமான சித்திரவதைகள் மற்றும் பாலியல் சித்திரவதைகளுக்குப் பின்னர் கொலை செய்யப்பட்டோ உயிருடனோ இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என அச்சம் உள்ளது.
ஆனாலும் இப்படுகொலைகள் தொடர்பில் இதுவரை எவரும்கைது செய்யப்படவில்லை.