அம்பாறை மாவட்டத்தில் அடைமழை; வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு!

0
188

அம்பாரை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகப் பெய்யும் அடை மழையால் மாவட்ட த்தின் கரையோரப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கி மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு ள்ளது. கடும் காற்றுடன் நேற்று முன்தினம் (08) ஆரம்பமான அடை மழை, நேற்றும் (09) இடை விடாது பெய்தது.

இதனால் கல்முனை, நிந்தவூர்,காரைதீவு,அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோயில்,பொத்துவில் போன்ற பகுதிகள் பாதிக்கப்பட்டதுடன் ஐயாயிரம் பேர் நிர்க்கதிக் கு உள்ளானதாக உத்தியோகபூர்வமற்ற செய்திகள் தெரிவித்தன.

மேலும், இப்பிரதேசங்களிலுள்ள தாழ் நிலங்களில் வெள்ளம் ஏற்பட்டு வீதிகள் நீரில் மூழ்கியதுடன் அட்டாளைச்சேனை, திராய்க்கேணி , ஆலையடிவேம்பு, நாவற்குடா, வாச்சிக்குடா போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதையடுத்து இங்கிருந்து வெளியேறியோர் பொது இடங்களிலும் பாடசாலைகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை இன்னும் நீடித்தா ல் அதிகமான குடும்பங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற நேரிடுமென்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே இருப்பிடங்களிலிருந்து வெளியேறி நலன்புரி நிலையங்களில் தங்கி உள்ளோருக்கான ஏற்பாடுகளை அட்டாளைச் சேனை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகங்கள் செய்துள்ளன. திடீரெனப் பெய்த இம் மழையால் க.பொ.த.சா.த பரீட்சை எழுதும் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டதுடன், போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here