யாழில் உந்துருளி விபத்து; தேர்வு எழுதிய மாணவி உட்பட மூவர் படுகாயம்!

0
402

யாழ்.சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவிலடிக்கு அருகில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் க.பொ. த. சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 16 வயது மாணவியொருவர் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ். தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை(06) பிற்பகல்- 12.45 மணியளவில் இடம்பெற்றது.

உந்துருளிகளில் இரு இளைஞர்கள் பயணித்த நிலையில் வேகமாக உந்துருளியைச் செலுத்தியமையே விபத்துக்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது. மாணவியின் துவிச்சக்கர வண்டியின் பின்புறமாக உந்துருளி மோதியுள்ள நிலையில் மாணவி தூக்கி வீசப்பட்டுக் காயமடைந்துடன் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மாணவி பிரபல கல்லூரியான சுன்னாகம் கந்தரோடை ஸ்கந்தவரோதாயாக் கல்லூரியில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அதே இடத்தைச் சேர்ந்தவராவார்.

சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த இரு இளைஞர்களும் சுமார்-50 மீற்றர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்ட நிலையில் கடும் காயங்களுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வீதியால் வந்தவர்கள் அவசர அம்புலன்ஸ் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்துக் காயமடைந்த மூவரையும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here