போராட்டத்திற்கு பணிந்தது பிரான்ஸ்: எரிபொருள் விலை உயர்வை இடைநிறுத்த முடிவு!

0
595

சில வாரங்கள் வன்முறை போராட்டங்களுக்கு வழிவகுத்த எரிபொருளுக்கான வரி விதிப்பை இடைநிறுத்துவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்திருக்கிறது.

கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டங்கள் பிரான்சிஸின் முக்கிய நகரங்களில் கணிசமான சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.

“மஞ்சள் ஜாக்கெட்” என்று அறியப்படும் இந்த போராட்டங்கள் அரசின் மீதான மக்களின் கோபத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளன.

இந்த போராட்டம் தொடங்கியதில் இருந்து 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இவற்றில் உருவான வன்முறையும், அழிப்புகளும் குறிப்பாக ‘ஆர்க் ட டிரியோம்ஃபில்’ சிலைகள் சிதைக்கப்பட்டதால் பெரும் கண்டனத்திற்கு உள்ளானது.

சிவப்பு நிறத்தில் முக்கோண வடிவ தடுப்பு, வண்டி சாலையில் பழுதடைந்தால் வைக்கப்படுவதை போல் ஓட்டுநர்கள் இந்த மஞ்சள் ஜாக்கெட்டுகளை அணிந்திருக்க வேண்டும். இது தொலைதூரத்தில் வருபவர்களுக்கு தெளிவாக தெரியக்கூடிய மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

மஞ்சள் ஜாக்கெட்டுகளை அணிய தவறினால் அபராதம் விதிக்கப்படும் சட்டம் 2008ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

எனவே, இந்த போராட்டம் “மஞ்சள் ஜாக்கெட்” என்ற பெயர் பெற்றது.

சமூக ஊடகங்கள் மூலம் வளர்ச்சி பெற்றுள்ள இந்த இயக்கம், அரசியலிலும் அதிக ஆதரவாளர்களை ஏற்படுத்தியுள்ளது.

(BBC)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here