பொலிஸ் உயரதிகாரிகள் குழு மட்டக்களப்பு நோக்கி விஜயம்!

0
515

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திவதற்காக பொலிஸ் உயரதிகாரிகள் குழுவொன்று மட்டக்களப்பு நோக்கி சென்றுள்ளனர்.

அந்தக் குழுவில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஆகியோரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் அவர்கள் மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விஷேட பொலிஸ் குழுவொன்று மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here