அழகு சாதனக்கடையொன்று உடைக்கப்பட்டு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணம் திருட்டுப் போயுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள அழகு சாதனக் கடையிலேயே நேற்று முன்தினம் இரவு இத்திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரிய வருவதாவது, அழகு சாதனக்கடையின் கூரை வழியாக உள்நுழைந்த திருடர்கள் அங்கு வைக்க ப்பட்டிருந்த உண்டியல் பணத்தினையும் தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகளையும் களவாடிச் சென்றுள்ளனர்.
ஒரு இலட்சத்து 20ஆயிரம் ரூபா வரையிலான பணம் திருட்டுப் போயுள்ளதாக கடை உரிமையாளரினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.