மாவீரர் நாள் நிகழ்வு 27/11/2018 அன்று கடலில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் பிரான்சில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட படகில் பொதுச்சுடர் எற்றி மலர்மாலை அணிவித்து நினைவு கொள்ளப்பட்டது.
.இதில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட நினைவுச்சுடர்கள் .பொதுச்சுடர் எற்றிய அதே நேரம் மாவீரர்களின் பெற்றோர் சகோதரர் , உறவினர்களால் சுடர் எற்றி நினைவு கொள்ளப்பட்டது. இதில் பொதுப்படத்திற்கான சுடரினை நாட்டுப்பற்றாளர் சிங்கன் அவர்களின் மகன் எற்றிவைத்தரர். பொதுப்படத்திற்கான மலர்மாலையை சிவசுப்பிரமணியம் அவர்கள் அணிவித்தரர். தொடர்ந்து சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் 1.35 மணிக்கு மணி எழுப்பி .1.36 மணிக்கு அகவணக்கம் இடம்பெற்றது. நினைவுச்சுடரினை 2ஆம் லெப்.கடல்விழி அவர்களின் சகோதரன் 1.37 மணிக்கு சுடர் எற்றினார்.மலர்மாலையை செவரன்(sevran) மேரி இயக்குனர் அவர்கள் அணிவித்தரர் தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது.
கடற்புலிகள் – பிரான்ஸ்.