ஏமனில் உள்ள அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதில் 40 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் போரில் ஈடுபட்டு வருகின்றன.
ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் போரில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், மேற்கு ஏமனில் தாக்குதலுக்கு அஞ்சி இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் இருக்கும் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில், 40-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அங்கிருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
முகாம் இருக்கும் இடம் அல்-மஸாராக்(Al-Mazraq) என்று அழைக்கப்படுகிறது. இங்கு கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் பல்வேறு தாக்குதல் அச்சுறுத்தலால் சுமார் 5000 மக்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். சவுதி விமானத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் பலியானதற்கு சான்றாக புகைப்பட ஆதாரங்களும் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக சவுதி படையின் தளபதி அகமது பின் அஸிரி(Ahmed al-Asiri) கூறியதாவது, கீழிருந்து நடந்த தாக்குதலுக்கு சவுதி விமானங்கள் பதிலடி கொடுத்திருக்கலாம். ஆனால் தாக்குதலுக்குள்ளான பகுதி இடம்பெயர்ந்து வாழும் மக்களின் இருப்பிடமா? என்பது குறித்த உறுதியான தகவல் இல்லை. இது குறித்து நாங்கள் அதிகாரிகளிடம் விசாரித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.