இலங்கையின் முன்னேற்றங்களை ஆராயும் பொருட்டு கொழும்பு வந்துள்ள ஐ.நா.வின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து இங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராய்ந்தார்.
இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் வந்த அவர், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது வடக்கில் நிலவும் பிரச்சினைகள், நல்லிணக்க முயற்சிகள் குறித்து ஐ.நா. அதிகாரி முதலமைச்சரிடம் விரிவாகக் கேட்டறிந்து கொண்டார்.
இதேவேளை மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையையும் அவர் இன்று சந்தித்துப் பேசுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடுகள் மற்றும் மீள உருவாகாமல் உத்தரவாதப்படுத்தலுக்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப், 6 நாள் விஜயம் மேற்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வந்தடைந்தார்.
மேலும் அவர் அரச,எதிர்க்கட்சி பிரமுகர்களை சந்தித்துப் பேச்சு நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.