மக்­களால் தோற்­க­டிக்­கப்­பட்­டவர் மீண்டும் நாட்டின் ஆட்­சியை கைப்­பற்ற சதி­மு­யற்சி: சந்­தி­ரிகா!

0
158

santhirikkaமக்­களினால் தோற்கடிக்கப்பட்ட நபர் மீண்டும் அதி­கா­ரத்­தினை கைப்­பற்ற முயற்­சிக்கும் சதித்­திட்டம் இடம்­பெ­று­கின்­றது. இழந்த உரி­மை­களை வென்­றெ­டுக்­கவே நாம் போராட வேண்­டி­யுள்­ளது என சந்­தி­ரிகா குமா­ர­துங்க தெரி­வித்துள்ளார்.

அடுத்த பொதுத் தேர்­தலில் நாட்­டிற்கு ஏற்ற மிகச் சரி­யான தலை­வரை மக்கள் தேர்ந்­தெ­டுக்க வேண்டும் எனவும் சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க குறிப்­பிட்டார்.

பத்தரமுல்லையில்  முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­னது.

இலங்­கையில் இன்று ஒற்­று­மையின் சூழ­லினை உரு­வாக்கிக் கொடுத்­ததும் மூவின மக்­களின் ஒற்­று­மை­யினை வென்­றெ­டுத்து கொடுத்­ததும் இந்த நாட்­டிற்­கான உயர்ந்த தியாகம் செய்த இரா­ணுவ வீரர்­களே ஆவர். பிள்­ளை­களை இழந்த தாய்­மார்­கள்­படும் துயரம் சொல்­லி­ல­டங்­கா­தது. நாட்­டிற்­காக தமது உயி­ரினை மாய்த்த இரா­ணுவ வீரர்­களின் தாய்மார் வேத­னை­ய­டை­வ­தையும் அதேபோல் நாட்­டிற்­காக பிள்­ளை­களை பெற்­றெ­டுத்­ததை நினைத்து பெரு­மையும் அடை­ய­வேண்டும். எனினும் கடந்த காலத்தில் இந்த யுத்த வெற்­றி­யினை ஒரு சிலர் அல்­லது ஒரு தனி நபர் மட்­டுமே உரிமை கொண்­டா­டிக் ­கொண்­டிந்­த­மையும் யுத்த வெற்­றியின் மூலம் ஒரு குடும்பம் மட்டும் நன்­மை­ய­டைந்­த­தையும் நாம் அவ­தா­னித்தோம். அந்த அந்த நபர் இன்று மக்­களால் தோற்­க­டிக்­கப்­பட்டு ஆட்­சியில் இருந்து வெளி­யேற்­றப்­பட்டுள்ளார். அவர்கள் மீண்டும் ஆட்சி அதி­கா­ரத்­தினை கைப்­பற்­றிக்­கொள்ள முயற்­சிக்­கின்­றனர். அதி­கா­ரத்­தினை மீண்டும் பெற்­றுக்­கொள்ள பாரிய சதித்­திட்டம் இடம்­பெ­று­கின்­றது.

இரா­ணு­வத்தின் வெற்­றி­யினை சுய­ந­லத்­திற்­காக பயன்­ப­டுத்தி அதில் வாழ்­கின்­றனர். நாம் நாட்­டையும் மக்­க­ளையும் கோரப்­பி­டி­யி­லி­ருந்து மீட்­டெ­டுத்­துள்ளோம் எனினும் இந்த பத்து ஆண்­டு­களின் நாட்டின் அரச வேலை முதல் அனைத்து விட­யங்­க­ளிலும் அடி­மட்டம் தொடக்கம் மேல் மட்டம் வரை ஊழல் பர­வி­யி­ருக்­கின்­றது. எமது கையில் இன்று மீண்டும் நாடு ஒப்­ப­டைக்­கப்­பட்­டாலும் மக்­க­ளுக்­கான தூய்­மை­யான நாடாக மாற்­றி­ய­மைப்­ப­தற்கு மிக நீண்ட காலம் அவ­சியம் அதற்கு மக்­களும் பொறு­மை­யுடன் எமக்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். கடந்த ஆட்­சியில் இலங்கை பத்து ஆயிரம் கோடி ரூபாய் அமெ­ரிக்க டொல­ருக்கள் கடனில் உள்­ளது. இவற்றில் இருந்து நாட்டை மீட்­டெ­டுக்க வேண்டும்.

புதிய அர­சாங்கம் நூறு நாட்கள் வேலைத்­திட்­டத்தின் நாட்டின் மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்தித் தரு­வ­தாக கூறி­யுள்­ளனர். ஆனால் நூறு நாட்­களில் நாட்டை மீட்­டெ­டுக்க முடி­யுமா என எனக்குத் தெரி­யாது. இந்­நி­லையில் பொதுத் தேர்தல் ஒன்­றிற்கு நாடு முகம் கொடுக்­க­வுள்­ளது. இது­வ­ரையில் நடைபெற்ற குடும்ப ஆட்சியில் திருடர்களும் ஊழல் மோசடிக்காரர்களுமே பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவம்படுத்தினர். ஆனால் இம்முறை பொதுத் தேர்தலில் நாட்டிற்கு பொருத்தமான திறந்த தலைவரை மக்களே தெரிவு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here