நியூஸிலாந்தில் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு !

0
315

மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு  2018 Auckland நியூஸிலாந்தில் உள்ள Flicking center Threekings இல் 25/11/2018 அன்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது .

ஈகைச்சுடரினை மேஜர் கிங்ஸ்லி அவர்களின் சகோதரன் வவி அவர்களால் ஏற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது.

பின்னர் ஜெகன் அவர்களின் பேச்சு இடம்பெற்றது பின்னர் அசோக் அவர்களின் சிறப்புப்பேச்சு இடம்பெற்றது.

பின்னர் மாவீரர் குடும்பங்களுக்கு தேசிய அடையாளமாக வளர்ந்த நிலையில் உள்ள கார்த்திகை மலர் செடி வழங்கப்பட்டது.

பின்னர் தொடர்ந்து பேசிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு நியூசிலாந்து (TCC NZ) பிரிவின் தலைவர் தயாகரன் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டது.

மாவீரர்களது பெற்றோரின் கௌரவிப்புக்கு பின்னர் மாலை உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இன் நிகழ்வுக்கு நியூசிலாந்து தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழீழ ஆர்வலர்கள் கலந்துகொண்டதுடன் ஏனைய அமைப்புகள் சார்ந்து பல உறுப்பினர்கள் கலந்துகொண்டதும் சிறப்பம்சமாகும்.

தமிழீழ வரலாற்றில் வித்தாகிப்போன எம் மறவர்களை இவ் உலகுக்கு ஈந்தளித்த எம் பொன்னான மாவீரரது பெற்றோர் எமக்கும் மற்றும் தமிழ் பேசும் அனைத்து தமிழ் பிள்ளைகளுக்கும் பெற்றோரே என்ற உணர்வோடு நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுற்றது.

-TCC NZ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here