தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் 64 ஆவது பிறந்தநாள் நிகழ்வில் ஈடுபட முனைந்ததாகக் கூறி வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் உட்பட மூவர் பேர் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரிடமிருந்த கேக் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாதாக கைது செய்யப்பட்ட நால்வரும் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவித்தார்.
தேசியத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழர் தாயகம் உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் வெகு எழுச்சிகரமாகக் கொண்டாடப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் இன்று யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலுள்ள இராணுத்தால் இடித்தழிக்கப்பட்ட தலைவரின்இல்லத்திற்கு முன்பாக பிறந்தநாள் நிகழ்வினைக் கொண்டாடுவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டதாகக் கூறியே வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் ஏழுபேர் வல்வெட்டித்துறைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
சிவாஜிலிங்கம் பயணித்த ஆட்டோவினை வழிமறித்த வல்வெட்டித்துறைப் பொலிசார் ஆட்டோவினுள் பயணித்த மூவரைக் கைது செய்ததோடு அவர்களின் ஆட்டோவில் இருந்த கேக் உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றியுள்ளர்.
பின்னராக அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் அறிவிப்பதாகக் கூறிய பொலிசார் சிவாஜிலிங்கத்தையும் அவருடன் பயணித்த ஏனைய இருவரையும் விடுவித்துள்ளனர்.