புதிய தேர்தல் முறையில் பாராளுமன்ற உறுப்பினர் தொகை 250 ஆக உயர்த்தப்படு மானால், மத்திய, மேல், ஊவா மாகாணங் களில் பெரும் பான்மை இனத்து மக்கள் மத்தி யில் கலந்து வாழும் தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதி நிதித்துவங்கள் பாது காக்கப்பட வேண்டும்.
இந்த அடிப்படையில் நுவரேலியா மாவட்டத்தில் ஐந்து, கொழும்பில் மூன்று, பதுளையிலும், கண்டியிலும் தலா இரண்டு என்ற குறைந்த பட்ச எண்ணிக் கையில் தமிழ் எம்.பிக்கள் தெரிவு செய்யப்பட இடமிருக்க வேண்டும்.
தமிழ் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை முழுமையாக பயன்படுத்தி தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யாவிட்டால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், நுவரெலியா, கொழும்பு, கண்டி, பதுளை மாவட்டங்களில் தமது ஜனத்தொகைக்கு ஏற்ப தமிழ் எம்.பிக்களை தெரிவு செய்துக் கொள்ள புதிய தேர்தல் முறைமையில் இடமிருக்க வேண்டும் என தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை நேரில் சந்தித்து கையளித்த ஆவணத்தில் கோரியுள்ளார்.