கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: பொலிஸார் கண்ணீர்ப் புகைத் தாக்குதல்!

0
173

mainpic_Lகல்வித் துறை தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கக் கோரி பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சங்கங்களின் சம்மேளனம் கல்வித் துறையில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கூறி ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக் கழகத்திலிருந்து அலரி மாளிகையை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தியிருந்தது.

பாடசாலைகளில் பணம் அறவிடுவதை சட்டமாக்குவதை நிறுத்த வேண்டும், மாலபே மற்றும் கொத்தலாவலவில் அமைந்துள்ள தனியார் பட்டம் வழங்கும் நிறுவனங்களை அகற்ற வேண்டும், திறந்த பல்கலைக்கழகத்தில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் போன்ற மூன்று பிரதான கோரிக்கைகளை முன்வைத்தே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். மகாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவு மீண்டும் குறைக்கப்படுவதற்கும் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஜயவர்த்தனபுர பல்கலைகழக முன்றலில் கூடி ஆர்ப்பாட்டமாக அலரி மாளிகையை நோக்கி வந்தனர். நுகேகொட, பொரள்ள ஊடாக கொள்ளுப்பிட்டிக்கு இந்த பேரணி அலரி மாளிகையை நோக்கி செல்ல முற்பட்ட போது பொலிஸார் கொள்ளுப்பிட்டி சந்தியில் தடுப்பை ஏற்படுத்தி தடுத்தனர்.

தடுப்பையும் மீறி மாணவர்கள் வர முற்பட்டதும் தண்ணீ பீய்ச்சியடித்ததுடன் கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல்களையும் நடத்தியிருந்தனர். மாணவர்களின் பேரணியால் நுகேகொட மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here