- இத்தாலி நாட்டின் தென்மேற்கு நகரான சலெர்னோ கடற்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இரு நாட்களுக்கு முன்பு இரவு 7.30 மணியளவில் கடற்பகுதியில் மிகப்பெரிய சுழற்காற்று உருவானது.
இது பார்ப்பதற்கு கடற்பகுதியையும் விண்ணையும் இணைப்பது போல் காணப்பட்டது. இந்த சுழற்காற்று மெல்ல நகர்ந்து துறைமுகத்தில் இருந்த கண்டெய்னர்களை தூக்கி வீசியது. இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்துள்ளனர். அதன் வேகம் மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இந்தக் காட்சி நம்ப முடியாத வகையில் இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர். மேலும் கடல் காற்றை அப்படியே உறிஞ்சி எடுப்பது போன்று இருப்பதாகவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
கடலின் மேற்பகுதியில் இருக்கும் வறட்சியை பூர்த்தி செய்ய, உடனடியாக மேலெழும் காற்றால் இதுபோன்ற சுழற்காற்று ஏற்படுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
#Maltempo Le immagini della tromba marina che ha colpito il litorale di #Salerno nel primo pomeriggio di oggi 👇🏻 pic.twitter.com/jG707GPBJp
— Rai Radio1 (@Radio1Rai) November 20, 2018