இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் 7 தமிழர்களை, உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
நவம்பர் 24 ஆம் திகதி, வட சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே குறித்த ஆர்ப்பாட்டத்தை நடத்த போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று (20) அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2000 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் நாள், தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில், கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் காயத்ரி, கோகிலவாணி, ஹேமலதா ஆகிய மூவரையும், உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய அதிமுக கொலையாளிகள் மூவரை, சிறையில் இருந்து விடுதலை செய்ய அதிமுக அரசு முயற்சி எடுத்ததால், மத்திய அரசின் ஆதரவு வேலை பார்க்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், விடுதலை செய்திருக்கிறார்.
2014 பிப்ரவரி 18 ஆம் நாள், இந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதியரசர் சதாசிவம் தலைமையிலான அமர்வு, 3 பேர் மரண தண்டனையை ரத்து செய்து, வாழ்நாள் சிறைத்தண்டனையாக ஆக்கியதுடன், அவர்களை விடுதலை செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று, சூசகமாகக் குறிப்பிட்டது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Home
சிறப்பு செய்திகள் 7 தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக வைகோ அறிவிப்பு!