வடக்கு, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பிராந்தியங்களில் இன்றும் நாளையும் கடற்றொழில் நடவடிக்கைகளை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அப்பகுதிகளுக்கு ஏற்கனவே சென்ற மீனவர்களையும் கரைக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, காலி பிரதேசத்தில் நேற்று முதல் பெய்த கடும் மழையினால் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.