எம் மக்களை..
அவர்தம் வாழ்வை..பொருளாதாரத்தை புரட்டிப்போட்ட கஜா புயல் .
பேரவலம்.
கஜாவினால் பலத்த சேதம் என்று தெரிவித்ததோடு அரசாங்கம் சார்பாக எந்த ஒரு நிவாரணமும் இதுவரை இல்லை என்றும் தன்னார்வலர்களுக்கும் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புபோல் வெளியுலகத்திற்கு தெரியவில்லை என்பதால் எந்த ஒரு உதவியும் இதுவரை இல்லையென்றும் தெரிவித்துள்ளார். சென்னை , கடலூர், கேரளாவைவிட அதிக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நன்மக்கள் நல்லுதவி புரியலாமே…
சேதம் குறித்து 90 வயதுள்ள மூதாட்டியிடம் பேசியபோது தன் வாழ்நாளில் இப்படி ஒரு புயலை பார்த்ததில்லை என்று தெரிவித்தார். அத்தனை மரங்களும் குறிப்பாக தென்னை மரங்கள் அத்தனையும் சாய்ந்துவிட்டதாகவும் கூடுதல் தகவல்.
நாகை,தஞ்சை,கடலூர்,திருவாருர்,புதுக்கோட்டை உட்பட 22 மாவட்டங்களில் சம்பா நெல் பயிர்களும் தென்னை,வாழை,மா,முந்திரி, பலா போன்ற மரவகைகளும் கரும்பு, மரவள்ளி,காய்கறி பயிர்கள் பயறு வகைப்பயிர்கள் மற்றும் ஏனைய பயிர்களும் கஜா புயலால் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.விவசாயிகள் கடந்த நான்கு வருடங்களாக வறட்சியால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்தார்கள். தற்பொழுது கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.இவர்களுக்கு உதவ தமிழக அரசும் தமிழக மக்களும்,குறிப்பாக நகரங்களில் வசிக்கும் மக்களும்,தொழில் முனைவோர்களும் அரசு ஊழியர்களும் பொது மக்களும் உதவ முன்வரவேண்டும்.
– வ.கௌதமன்.