சட்டவிரோதமான முறையில் தங்க ஆபரணங்களை கொண்டு சென்ற சிங்கப்பூர் பிரஜை ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை சிங்கப்பூரிலிருந்து சிறிலங்கா சென்ற விமானத்தில் பயணித்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரிடமிருந்து 7 கிலோகிராம் 212 கிராம் எடையுடைய தங்காபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன் பெறுமதி 43 மில்லியன் ரூபாவுக்கும் (4,30,00,000) அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர், சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.