இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
கஜா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 320 கி.மீ. – நாகைக்கு வடகிழக்கே 300 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. கஜா புயலின் வேகம் மணிக்கு 18 கிலோ மீட்டரில் இருந்து 17 கிலோ மீட்டராக குறைந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்நிலையில், கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என சென்னை வானிலை மைய அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 138 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது. இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும்.
புயலின் தாக்கத்தால் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ள