பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ – அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்!

0
400

அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் சார்பில் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் தமிழகத்தில் பல்வேறு ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழுபேரை விடுவிக்கக் கோரி தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாநில சட்டமன்றத்தில்  34-வது சீக்கிய இனப்படுகொலை நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான சீக்கிய ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர். இதையடுத்து, தமிழகத்தில் 28 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் 7பேரை விடுவிக்க கோரி சீக்கியர்கள் சார்பில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் எழுதப்பட்டது. அந்த கடிதத்தில், “முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த 28 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் 7பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும்.

இந்த கொலைவழக்கு தொடர்பான விசாரணையில் பல்வேறு முரண்பட்ட தகவல்களை, விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக, அவர்கள் 7பேரையும், விடுதலை செய்து அவர்கள் குடும்பத்துடன் இணைய  வழிவகை செய்யவேண்டும். இது எங்களுடைய விருப்பம் மட்டுமில்லை. மாறாக நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யரை பின்பற்றும் ஏராளமான மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கனவும் கூட.பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் வழங்கிய மனுவை நீங்கள் பரீசிலிப்பிர்கள் என நம்புகிறோம். அதே போல, தமிழக அமைச்சரவை சார்பில்  7பேரை விடுவிக்கக் கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவான நிலைப்பாடுகளை எடுப்பீர்கள் என நம்புகிறோம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே கார்த்திகேய பிரபு நாகராஜன், ஜெயகணேஷ், கார்த்திகேயன் தெய்வீகராஜன் மற்றும் சபரீஷ் ரகுபதி ஆகியோர் கவர்னர் நடவடிக்கை எடுக்க கோரி கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here