பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் மைத்திரி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் மைத்திரி விடுத்த வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நேற்று (12) உயர் நீதிமன்றத்தில் 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் வௌியான வர்தமானி அறிவித்தலுக்கு பிரதம நீதியரசர் தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் நலின் பெரேரா, உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன ஆகியோரினால் இந்த மனுக்கள் மீதான விசாரணை முன்னெடுக்கப்பட்டது.