கரணவாயில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

0
440
மின்சாரம் தாக்கி பலியானதாகக் கூறப்படும் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கிணற்றில் இரு ந்து மீட்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கரண வாய் மத்தி, ஊரியான் பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இரத்தி னம் இரவீந்திரநாதன் (வயது-53) என்ப வரே பலியானவராவார்.
மேற்படி குடும்பஸ்தர் தனது சிறிய தாயா ரின் வீட்டில் கிணற்றின் உட்புறத்தில் பொரு த்தப்பட்டிருந்த தண்ணீர் மோட்டார் திருத்து வதற்காக இறங்கியதாக கூறப்படுகிறது. அச்ச மயம் மின்சாரம் தாக்கி கிணற்றுக்குள் வீழ்ந் ததாக கூறப்படுகிறது.
கிணற்றில் வீழ்ந்து கிடந்த சடலத்தை நெல்லியடி பொலிஸார் மீட்டு வைத்திய சாலையில் ஒப்படைத்தனர். இது தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணை களை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here