முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டுக்குள் வந்ததும் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கடுவெல நீதவான் தம்மிக்க ஹேமபால நேற்று உத்தரவிட்டுள்ளார்.
விமான நிலையத்தில் வந்திறங்கியவுடன் கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வலுவுள்ளதாக்குமாறு நிதி மோசடிப் பிரிவுக்கு பசில் ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டாம் என்ற உத்தரவை பிறப்பிக்குமாறும் சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் நீதவான் நிராகரித்தார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா இந்த கோரிக்கையை முன்வைத்தார். சட்டத்தரணிகள் 20 பேருடன் இவர் ஆஜராகியிருந்தார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற நிதி மோசடி, ஊழல் தொடர்பாக நிதி மோசடிப் பிரிவில் முறைப்பாடு செய் யப்பட்டுள்ளது.
நிதி மோசடிப் பிரிவு பொலிஸார் இன்றியே நேற்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
திவிநெகும திணைக்களத்தில் நடைபெற்றதாக கூறப்படும் பாரிய நிதிமோசடி மற்றும் 2006 ல் மிக் விமான கொள்வனவு, உள்ளிட்ட நிதிமோசடிகள் தொடர்பாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பசில் ராஜபக்ஷ மருத்துவ தேவைக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாகவும் அவர் மீண்டும் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சட்டத்தரணி யூ.ஆர்.த. சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.