மஹிந்த அபேகோனுக்கு இரண்டரை வருட கடூழிய சிறைத் தண்டனை!

0
103

pg01_2மத்திய மாகாண சபை தவிசாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான மஹிந்த அபேகோனுக்கு கண்டி மாவட்ட மேல் நீதிமன்றம் இரண்டரை வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2001 பொதுத் தேர்தலின் போது வாக்களிப்பு நிலைய அதிகாரிகளை அச்சுறுத்தி திருட்டு வாக்கு அளிக்க முற்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவருக்கு நேற்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2001 ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது பஹதஹோவாஹெட்ட தோட்ட முகாமையாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்குள் புகுந்து அங்கிருந்த தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்தியமை தேர்தல் தினத்தில் வாக்களிக்கும் நிலையத்திற்கு அருகில் சட்ட விரோதமாக ஒன்றுகூடல், வாக்குச் சீட்டை ஒத்த வேறு கடதாசியை வாக்குப் பெட்டிக்குள் இட முயன்றமை மற்றும் அதற்காக ஆட்களை ஒன்றுதிரட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தன.

இதில் முதலாவது குற்றச்சாட்டிற்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் இரண்டாவது, மூன்றாவது குற்றச்சாட்டு களுக்கு தலா ஒரு வருடம் வீதம் கடூழிய சிறைத் தண்டனையும் நீதிமன்றம் வழங்கியது.

இதேவேளை குற்றவாளி சார்பில் ஆஜரான சட்டத்தரணி தனராஜ் சமரகோன் சமூகத்தில் முக்கிய பதவி வகிக்கும் மஹிந்த அபேகோனுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஒத்தி வைத்த சிறைத் தண்டனையாக மாற்றுமாறு நீதிமன் றத்தை கோரினார். ஆனால் இந்த கோரிக்கையை ஏற்காது நீதிபதி மேனகா விஜேசுந்தர இந்த தண்டனையை வழங்கி தீர்ப்பளித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வழங்கு விசாரணை கடந்த பெப்ரவரி 24ம் திகதி ஆரம்பமானதோடு மத்திய மாகாண சபைத் தலைவர் மஹிந்த அபேகோன் அடங்கலான 12 சந்தேக நபர்கள் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந் தனர். இதில் 11 பிரதிவாதிகள் தொடர் பில் போதிய சாட்சி இல்லாததால் அவர்கள் கடந்த வாரம் விடுவிக்கப்பட் டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here