பிரான்ஸ் பசிபிக் பகுதியில் உள்ள நியூ கலெடோனியா மக்கள் சுதந்திரத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
பிரான்ஸிலிருந்து விடுதலை பெற்று தனி நாடாக அரசமைக்கலாமா அல்லது பிரான்ஸின் ஆளுகையிலேயே இருக்கலாமா என்பதற்காக நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் 56.4 வீதம் பேர் பிரான்ஸின் ஆளுகையிலேயே இருக்கலாம் என்று வாக்களித்துள்ளனர். பிரிந்து சென்று தனி நாடு அமைக்கலாம் என்பதற்கு ஆதரவாக 43.6 வீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
இந்த வாக்கெடுப்பில் 81 வீதம் பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர். 1988 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இது பிரான்ஸ் குடியரசின் மீதுள்ள நம்பிக்கையை காட்டுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “நான் எவ்வளவு பெருமையாக உணர்கிறேன் என்பதை உங்களிடம் சொல்ல வேண்டும். ஒரு வரலாற்று காலக்கட்டத்தை ஒன்றாக கடந்துள்ளோம்” என்று கூறி உள்ளார்.
காலனித்துவம் முடிவுக்குவராத 17 பிரதேசங்களில் இதுவும் ஒன்று என்று ஐ.நா குறிப்பிட்டுள்ளது