அரசாங்கம் தேர்தலை பின்போட்டால் வீதிக்கு இறங்குவோம்: உதய கம்மன்பில

0
152

Udaya-Gammanpilaதேர்தலை பிற்போட அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் வீதிக்கு இறங்கி போராட உள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மஹிந்தவின் சூட்டை குளிராக்கவென தேர்தலை பிற்போடும் திட்டத்தை செயற்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பில் (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய மேல் மாகாண சபை உறுப்பினர் கம்மன்பில குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷ மீது எத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைத் தாலும் அவரது புகழ் ஓங்கி யிருப்பது போன்ற காரணங்களால் மஹிந்த ராஜபக்ஷவை மறக்க முடியாது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று தாம் எச்சரித்ததால் அரசாங்கம் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை ஆணையாளர்களுக்கு அளிக்காது பதவிகாலத்தை நீடித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர் உள்ளூராட்சி சபைகள் குறித்த அதிகாரம் முதலமைச்சருக்கே உண்டு என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here