இன்று அந்தரப்படுவதை அன்று காட்டியிருந்தால்…

0
229
இலங்கையின் அரசியல் நிலைமை குறித்து சர்வதேச நாடுகளும் ஐ.நா அமைப்பும் அதீத கவனம் செலுத்தியுள்ளன.
இதற்கு அமைவாக வெளிநாட்டுத் தூதுவர் களும் ஐ.நா சபைப் பிரதிநிதிகளும் இலங்கை யின் ஆட்சித் தலைவர்களையும் மக்கள் பிரதி நிதிகளையும் ஓடி ஓடிச் சந்திக்கின்றனர்.
இலங்கையில் ஜனநாயகப் பண்பு பறிபோய் விடுமோ என்ற பயம் சர்வதேசத்தைப் பீடித் துள்ளதென்பது இதிலிருந்து தெரிய வருகின்றது.
இப்போது நாம் கேட்பதெல்லாம் இலங்கை யில் ஜனநாயகப் பண்பு இப்போதுதான் மீறப் பட்டுள்ளது எனச் சர்வதேசம் கருதுகிறதா என்பதுதான்?
2009ஆம் ஆண்டு வன்னிப் பெருநிலப்பரப் பில் தமிழின அழிப்பு நடந்தபோது; எங்களைக் கைவிட்டுப் போய்விடாதீர்கள் என்று தமிழ் மக்கள் வன்னிப் பெருநிலப்பரப்பில் இயங்கிய சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங் களை இரந்து கேட்டபோது,  அதனையயல்லாம் நிராகரித்த சர்வதேச தொண்டு நிறுவனங்கள், தமிழ் மக்களைத்தவிக்கவிட்டு தத்தம் வாக னங்களில் ஓடித் தப்பினர்.
ஒரு அரசு இனத்துவேசத்தின் அடிப்படை யில் சிறுபான்மை இனமாகிய தமிழ் மக் களைச் கொன்றொழிக்கின்றது எனும்போது அதனை ஜனநாயக விரோத செயலாகக் கருதியிருந்தால்,
இத்தகைய ஜனநாயக விரோதச் செய லைச் செய்ய வேண்டாம் என்று இலங்கை அரசைக் கண்டிக்கின்ற கடமையைச் சர்வதேச சமூகமும் ஐ.நா சபையும் செய்திருக்க வேண்டும்.
அன்று அதனைச் செய்திருந்தால், பல்லா யிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர் பாது காக்கப்பட்டிருப்பதுடன் இப்போதிருக்கின்ற அரசியல் குழப்பம் நடக்காமலும் இருந்திருக் கும்.
ஆக, இலங்கையில் தமிழ் மக்கள் கொன் றொழிக்கப்பட்டபோது பேசாதிருந்த சர்வதேசம் இப்போது இலங்கை விவகாரம் குறித்து சந் திப்புக்களை நடத்துவதும் அவசர கடிதங் களை அனுப்புவதும் ஏனென்பது புரியவில்லை.
எதுஎவ்வாறாயினும் இலங்கை அரசும் சிங்கள மக்களும் சர்வதேச சமூகமும் ஓர் உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதாவது இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்குச் சரியான தீர்வை முன்வைக் கத் தவறினால், இந்த நாட்டில் ஒருபோதும் அமைதி ஏற்பட மாட்டாது என்பதே அந்த உண்மையாகும்.
1983இல் ஆரம்பித்த ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப் பட்டது.
இங்கு ஆயுதப் போரின் முடிவு  என்பது சமா தானத்தின் அடிப்படையிலோ அன்றி இனப் பிரச்சினை தீர்க்கப்பட்டதன் வகையிலோ நடந்த தல்ல. மாறாக ஒருபெரும் கொடிய யுத்தத்தின் மூலமே ஆயுதப் போராட்டம் முடிவுறுத்தப்பட்டது.
இந்த முடிவுறுத்தல் ஆயுதப் போராட்டத்தை யேன்றி தமிழ் மக்களின் இலட்சியத்தை அல் லது அவர்களின் உரிமைகளை முடிவுறுத்திய தாக யாரும் நினைத்துவிடக்கூடாது.
எனவே மேற்போந்த நிலைமை இருக்கும் வரை இந்த நாட்டில் குழப்பங்கள் ஏதோவொரு வடிவில் ஏற்படும் என்பது சர்வநிச்சயம்.
(வலம்புரி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here