தமிழனாய் பிறந்தது குற்றமா? அல்லது நாம் இன்னும் உயிருடன் இருப்பது குற்றமா? எனக் கேள்வி எழுப்பி முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கொட்டகை முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) 603ஆவது நாளாக இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ‘உலக நாடுகளே எங்களுக்காக குரல் கொடுக்கமாட்டீர்களா’, ‘எமது கண்ணீருக்கு முடிவே இல்லையா நல்லாட்சி அரசே!’, ‘நல்லாட்சி அரசே காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே?’, ‘தமிழனாய் பிறந்தது குற்றமா? அல்லது நாம் இன்னும் உயிருடன் இருப்பதுகுற்றமா?’, தமிழருக்கான நீதி எப்போது கிடைக்கும்! என்ற கோஷங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.