பிரான்சில் இருக்கும் டென்னிஸ் விளையாட்டுக் கழகம் Fête le mur இதனை நிறுவியவர் பிரான்சின் முன்னாள் டென்னிஸ் விளையாட்டு வீரர் திரு. Yannick noah .இவர் ஒரு சிறந்த பாடகரும் ஆவார். இவர் தலைமையில் பிரான்சில் இருக்கும் 200 மேற்பட்ட வீரர்களை ஒருங்கிணைத்து டென்னிஸ் விளையாட்டுப்போட்டி ஒன்று நடைபெற்றது .
போட்டிகளை ஆபிரிக்க கண்டத்தின் கீழ் இந்து சமுத்திரத்தில் காணப்படும் ஒரு சிறிய தீவான ரியூனியன் (Reunion) என்ற நாட்டில் நடாத்தினர் இதில் La Courneuve என்ற இடத்தில் இருந்து நான்கு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.அதில் மூவர் தமிழ் விளையாட்டு வீரர்கள் ஆவர் . வரதகுமார் துஷானன் ,அகிலன் அஸ்வின் ,அகிலன்ஆகாஷ் மற்றும் Mady baba ஆகியோரே குறித்த டென்னிஸ் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டவர்கள் ஆவர் .
இதில் அகிலன் ஆகாஷ் இறுதி சுற்றில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டதோடு fête le mur La Courneuve மூன்றாம் இடத்தையும் பிரான்சு சார்பாக பெற்றுக் கொண்டது. இதற்கான வெற்றிக் கிண்ணமும் 500€ பணப்பரிசும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது அண்மைக்காலமாக தமிழ் சிறார்கள் பல துறைகளிலும் சாதித்து வருகின்றனர் .