பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இரண்டாவது நாள் செயலமர்வு இன்று (28.10.2018) ஞாயிற்றுக்கிழமை இவ்றி சுசென் பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.
தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் வளர்தமிழ் 6 தொடக்கம் வளர்தமிழ் 12 வரை தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இச்செயலமர்வு காலை 09.30 மணிக்கு அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழ்ச்சோலை கீதத்துடன் ஆரம்பமானது.
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார் வரவேற்புரையை ஆற்றியிருந்தார்.
தொடர்ந்து பயிற்றுநர்கள் சிறப்பாக குறித்த செயலமர்வை நிகழ்த்தியிருந்தனர்.
வழமைபோன்று இம்முறையும் செயலமர்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதியஉணவு, தேநீர், சிற்றுண்டிகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதைத் தொடர்ந்து செயலமர்வு நிறைவுகண்டது.
கடந்த் 07.10.2018 ஞாயிற்றுக்கிழமை பாலர்நிலை முதல் வளர்தமிழ் 5 வரை தமிழ் பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு இவ்றி சுசென் பகுதியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)
Home
சிறப்பு செய்திகள் பிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற தமிழ்பள்ளி ஆசிரியர்களுக்கான வருடாந்த செயலமர்வு!