வாகரை மாவீரர் துயிலும் இல்லத்துக்குரிய மீள் நிர்மாணிப்பு மற்றும் நினைவேந்தல் குழு உருவாக்கம்!

0
165
எதிர்வரும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்விற்கான வாகரை மாவீரர் துயிலும் இல்லத்துக்குரிய மீள் நிர்மாணிப்பு மற்றும் நினைவேந்தல் குழு நேற்று சனிக்கிழமை (27) வாகரை கண்டலடி துயிலுமில்லத்தில் சம்பிரதாயபூர்வமாக உருவாக்கப்பட்டது.
இதன் போது வாகரை பிரதேச கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர்கள், அங்கத்தவர்கள் , மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இங்கு கூடிய மக்களால் நினைவேந்தல் குழு உருவாக்கப்பட வேண்டும் என தீர்மானித்ததற்கமைய இக்குழு உருவாக்கம் பெற்றது.
அதனடிப்படையில் அனைத்து மக்களும் ஏகமனதாக இக்குழுவின் தலைவராக வாகரை கண்டலடி கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் இராசையா யோகேஸ்வரனைத் தெரிவு செய்ததுடன் செயலாளராக வாகரை கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் பத்தக்கொடி உதயகுமார் பொருளாளராக மாவீரர் ஒருவரின் மனைவியான யோகேஸ்வரன் ஜெயலெட்சுமி  உப தலைவராக புளியங்கண்டலடி கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் கந்தசாமி லதாகரன் உப செயலாளராக  கண்டலடி கிராம அபிவிருத்தி சங்க செயலாளருமான நல்லதம்பி லியோஜன் மற்றும் செயற்பாட்டாளர்கள் என 21க்கு மேற்பட்டவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
அதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் துயிலுமில்ல துப்புரவுப்பணிகள் தொடக்கம் 27.11.2018 அன்றைய மாவீரர்  நினைவேந்தல்  நிகழ்வுவரை இக்குழுவினர் செயற்படவுள்ளமை குறுப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here